
ஹரியாணா மாநிலம் குருகிராமில் நேற்று அதிகாலை திடீரென பெய்த கனமழையின் காரணமாக தில்லி-குருகிராம் விரைவுச்சாலை நீரில் மூழ்கியது. இதனால் மக்கள் அவதியடைந்தன.
கனமழை காரணமாக தில்லி-குருகிராம் விரைவுச்சாலையில் சுமார் 5 கி.மீ தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்டப் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து நெரிசலில் சிக்கிய பயணிகள் பேருந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றதால், அதிலிருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இதனிடையே தில்லி வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பலத்த காற்று மணிக்கு 30-40 கி.மீ வரை வீசக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகள், ஒடிசாவின் சில பகுதிகள், கங்கை மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பிகார் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பல பகுதிகள் அடுத்த சில நாள்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலைகள் இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.