தென்கிழக்கு ரயில்வேயின் கராக்பூர்-பத்ராக் பிரிவின் பஹங்கா பஜார் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் 2-ஆம் தேதி பாலாசோர் மாவட்டத்தின் பஹங்கா பஜாரில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 292 பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அடுத்த மூன்று நாள்கள்ற சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஜூன் 28(இன்று) புறப்படவிருந்த 8 ரயில்கள் மற்றும் ஜூன், 29,30 ஆகிய தேதிகளில் புறப்படவிருந்த 2 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பயணிகளின் சிரமத்தைத் தவிர்க்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


