ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் ஒரேநாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகர், நீட், ஜேஇஇ ஆகிய தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி இடமாக இருக்கிறது. அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் இங்கு வந்து பயின்று செல்கின்றனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள பயிற்சி மையத்தில் படித்த இரு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்யா சேத்(17) என்பவர் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக வித்யபீட பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். இவர் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் அல்ல என்று குறிப்பு எழுதி வைத்துள்ளார். மற்றொருவர் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த மெஹுல் வைஷ்ணவ்(18). இவரிடமிருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
தற்போது 2.25 லட்சம் பேர் கோட்டா நகர் பயிற்சி மையங்களில் பயில்கின்றனர், நடப்பு ஆண்டில் மட்டும் இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2019 முதல் 2022 வரை 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் 2011 முதல் 121 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் தோல்வி பயம், குறைவான மதிப்பெண்கள், பயிற்சி மையங்களின் சுற்றுச்சூழல், பெற்றோர்களின் அழுத்தம் உள்ளிட்டவை காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இந்த தொடர் தற்கொலைகள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நந்தி கல்யாணம் கண்டால் முந்தி திருமணம்!

மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள்: உச்சநீதிமன்றம்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 16ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு

ஈரானின் புதிய தலைமை மதகுரு கோமாவில் உள்ளாரா? போரை இயக்குவது யார்?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

