தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1.50 லட்சம் கோடி!!

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.50 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2023, 9:46 am

DIN

கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ. 1.50 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கடந்த 2017 ஜூலை மாதம் அமலுக்கு வந்தது. அதன்படி ஒவ்வொரு மாதமும் ஜிஎஸ்டி வசூல் குறித்த தகவலை  மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1.55 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில் பிப்ரவரி மாதம் ரூ. 1.50 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மொத்தம் ரூ.1,49,577 கோடி சரக்கு மற்றும் சேவை வரி சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரியாக (சிஜிஎஸ்டி) ரூ.27,662 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரியாக (எஸ்ஜிஎஸ்டி) ரூ.34,915 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியாக (ஐஜிஎஸ்டி) ரூ.75,069 கோடி (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.35,689 கோடி உள்பட), செஸ் ரூ.11,931 கோடியும் (இறக்குமதி பொருள்கள் மீது விதிக்கப்பட்ட ரூ.792 கோடி உள்பட) வசூலிக்கப்பட்டன.

கடந்த நிதியாண்டு (2021-22) பிப்ரவரி மாதம் ரூ. 1,33,026 கோடி வசூல் ஆகியுள்ளது. நடப்பு ஆண்டு இதைவிட கூடுதலாக 12% வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.