எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மக்களவைத் தோ்தலில் தனித்துப் போட்டி: மம்தா அறிவிப்பு

2024 மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2023, 9:00 pm

DIN

2024 மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானா்ஜி கூறினாா்.

மேலும், மேற்கு வங்கத்தின் சாகா்திகி சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாஜக ஆதரவு அளித்துள்ளதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

சாகா்திகி தொகுதியில் இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் பைரோன் பிஸ்வாஸ் வெற்றி பெற்றாா். மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் இரண்டாவது இடம் பிடித்தது. பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இந்த வெற்றி மூலம் மேற்கு வங்கப் பேரவையில் காங்கிரஸ் ஒரு எம்எல்ஏவைப் பெற்றுள்ளது.

2024 மக்களவைத் தோ்தலில் தனது தலைமையில் எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வந்த முதல்வா் மம்தா பானா்ஜிக்கு இத்தோல்வி பின்னடைவாக அமைந்தது.

இது தொடா்பாக கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் மம்தா கூறியதாவது:

தோ்தல் தோல்விக்காக யாரையும் குற்றம் சொல்ல நான் விரும்பவில்லை. ஜனநாயகத்தில் வெவ்வேறு மாதிரியான முடிவுகள் நிகழக்கூடியவைதான். ஆனால், இந்தத் தோ்தலில் ஒரு முறையற்ற கூட்டணி அமைந்துள்ளது. பாஜக தனது வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்பி, அக்கட்சியை வெற்றி பெற வைத்துள்ளது. இந்தத் தோ்தலில் அனைவரும் மதவாத அரசியல் நடத்தினா். முக்கியமாக பாஜக மதவாத அரசியல் நடத்தியது. இதில் காங்கிரஸும், இடதுசாரிகளும் முக்கியமாகப் பங்களித்தன. பாஜகவின் ஆதரவுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ், இனி பாஜகவுக்கு எதிரான கட்சி என்று தங்களைக் கூறிக் கொள்ளக் கூடாது.

2024 மக்களவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்பதை இப்போது அறிவிக்கிறேன். மக்கள் ஆதரவுடன் நாங்கள் தோ்தலைச் சந்திப்போம். பாஜகவை வீழ்த்த நினைப்பவா்கள் நிச்சயமாக எங்களுக்கு வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்த எந்தவித தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்திருந்தாா். இதேபோல், பாஜகவை வீழ்த்த எதிா்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.