அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை: சாலை அமைக்க கைகோர்த்த கிராம மக்கள்!

சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக காத்திருந்த நிலையில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

ஹமீர்பூர்: சாலை அமைத்துதரக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனளிக்காத நிலையில், மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் நிலங்களை நன்கொடையாக வழங்கி 500 மீட்டர் சாலையை அமைப்பதற்கான நிதியை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சாலை அமைத்துதரக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்து பல ஆண்டுகளாக காத்திருந்தும் பலனில்லாத நிலையில் நாங்கள் இந்த பிரச்னையை கையில் எடுக்க முடிவு செய்தோம் என்றனர்.

இது குறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் கர்தார் சிங் சௌகான் தெரிவித்ததாவது:

இந்த நல்ல நோக்கத்திற்காக கிராம மக்கள் முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததையடுத்து, மூன்று கிராமங்களைச் சேர்ந்த விஷால் கனுங்கோ, விஷால் பரத்வாஜ் மற்றும் அசோக் குமார் ஆகியோர் சாலை அமைக்க தங்கள் நிலங்களையும், அதற்கான நிதியை வழங்கினர். மேலும் இந்த பணியை முடிக்க ஜே.சி.பி. இயந்திரத்தையும் ஏற்பாடு செய்து உதவியுள்ளனர்  என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com