தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இந்தியா வந்தார் ஆஸ்திரேலிய பிரதமர்!

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று(புதன்கிழமை) இந்தியா வந்துள்ளார். ஆமதாபாத் வருகை தந்த ஆல்பனேசியை அதிகாரிகள் பலரும் வரவேற்றனர். 

News image
Updated On :8 மார்ச் 2023, 12:49 pm

DIN

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி 4 நாள்கள் சுற்றுப்பயணமாக இன்று(புதன்கிழமை) இந்தியா வந்துள்ளார். 

ஆமதாபாத் வருகை தந்த ஆல்பனேசியை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் அதிகாரிகள் பலரும் வரவேற்றனர். 

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி இன்று மாலை சபர்மதி ஆசிரமம் செல்கிறார். பின்னர் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் ஹோலி பண்டிகையில் பிரதமா் நரேந்திர மோடியுடன் இணைந்து கலந்துகொள்கிறார். பின்னர் நாளை(மார்ச் 9) மும்பையில் நடைபெற உள்ள இந்திய - ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் ஆட்டத்தை இரு தலைவா்களும் பாா்வையிடுகின்றனர். 

அதன்பின்னர் மார்ச் 10 ஆம் தேதி தில்லி செல்லும் அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வா்த்தகம், முதலீடு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்டவை குறித்து இரு நாடுகளின் பிரதமா்களுக்கும் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவையும் சந்தித்துப் பேசுகிறார். 

ஆஸ்திரேலிய பிரதமராக ஆல்பனேசி கடந்த ஆண்டு மே மாதம் பதவியேற்றதையடுத்து, முதல் முறையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.