சர்வதேச மகளிர் தினம்: கேஜரிவால் வாழ்த்து!
ஹோலி மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


புது தில்லி: ஹோலி மற்றும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
ஹோலி பண்டிகையில் மக்கள் மகிழ்ச்சியுடன், செழிப்புடனும் இருக்க வாழ்த்துகிறேன். இந்த வண்ணத் திருவிழா மகிழ்ச்சியையும், செழிப்பையும் மனநிறைவையும் அளிக்கட்டும்.
சமூகத்தில் நமது பரஸ்பர சகோதரத்துவத்தின் அடித்தளம் வலுப்பெறட்டும் என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஒட்டுமொத்த பெண்கள் சமூகத்திற்கும் வணக்கம் செலுத்துகிறேன். பெண்களின் சக்திக்கு வணக்கம்.
நம் வீட்டிற்கும் சமூகத்திற்கும் வடிவத்தையும் மதிப்புகளையும் கொடுப்பவர்கள் பெண்கள். அவர்களுக்கு வாய்ப்பு, ஊக்கம் மற்றும் ஆதரவை வழங்குவது நமது சமூகத்தின் பொறுப்பாகும் என்று இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...