இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

ஆஸ்திரேலிய பிரதமரிடம் 2 விவகாரங்களை வலியுறுத்திய மோடி

ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியிடம் கோயில்கள் தாக்கப்படுவது மற்றும் இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

News image
ஆஸ்திரேலிய பிரதமரிடம் 2 விவகாரங்களை வலியுறுத்திய மோடி
Updated On :10 மார்ச் 2023, 12:45 pm

DIN


புது தில்லி: ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியிடம் கோயில்கள் தாக்கப்படுவது மற்றும் இந்திய மக்களின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவரங்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

 இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசியுடன் பிரதமா் நரேந்திர மோடி இன்று பேச்சுவாா்த்தை நடத்தினார்.

ஆஸ்திரேலிய பிரதமராக கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்ற ஆன்டனி ஆல்பனேசி முதல் முறையாக இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளாா். கடந்த புதன்கிழமை குஜராத் மாநிலம் அகமதாபாதுக்கு வந்த அவா், அங்குள்ள சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்று பாா்வையிட்டாா். வியாழக்கிழமை மும்பை வந்த அவா், தில்லிக்கு வியாழக்கிழமை மாலை வந்தடைந்தாா்.

பிரதமா் மோடி-பிரதமா் ஆல்பனேசி இடையேயான பேச்சுவாா்த்தை தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்தப் பேச்சுவாா்த்தையின்போது வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாகத் தலைவா்கள் இருவரும் விரிவாக விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பின்போது, கடந்த சில வாரங்களாக ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்கள் மீது தாக்குதல்கள் நடப்பது தொடர்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற செய்திகளால் இந்தியர்கள் கவலை அடைவது இயற்கைதான். இது தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரிடம் வலியுறுத்தியிருந்தேன். மேலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் உறுதியளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டாவது அதிகபட்ச வெளிநாட்டினர் இந்தியர்கள். ஆஸ்திரேலியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்தியா - ஆஸ்திரேலியா
இந்தியாவின் 17-ஆவது மிகப் பெரும் வா்த்தகக் கூட்டாளியாக ஆஸ்திரேலியா திகழ்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம் கடந்த 2021-ஆம் ஆண்டில் சுமாா் ரூ.2.25 லட்சம் கோடியாக இருந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு-வா்த்தக ஒப்பந்தம் கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தமானது இருநாடுகளுக்கு இடையேயான வா்த்தகத் தொடா்பை மேலும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்தப் பயணம் குறித்து பிரதமா் ஆல்பனேசி கூறுகையில், ‘பிரதமா் மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியா கட்டமைத்துள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலைப் பாா்வையிட்டேன். இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரத்தில் ஆஸ்திரேலியாவின் நெருங்கிய கூட்டாளியாக இந்தியா திகழ்வதை இந்தப் பயணம் வெளிக்காட்டுகிறது.

பாதுகாப்புத் துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டு அரசுகளும் தொடா்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படைகள் பங்கேற்கும் ‘மலபாா்’ கூட்டுப் பயிற்சியை ஆஸ்திரேலியா நடப்பாண்டு இறுதியில் முதல் முறையாக நடத்தவுள்ளது.

ஆஸ்திரேலியா நடத்தும் தலிஸ்மான் சாப்ரே பன்னாட்டு கூட்டுப் பயிற்சியில் இந்தியா முதல் முறையாகக் கலந்து கொள்ளவுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியம் வெளிப்படைத்தன்மையுடனும் சுதந்திரமாகவும் திகழ இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன’ என்றாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.