2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுங்கள்: மோடி

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள்கள் உள்ள நிலையில் யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். 

News image
Updated On :13 மார்ச் 2023, 7:02 am

DIN

சர்வதேச யோகா தினத்திற்கான 100 நாள்கள் உள்ள நிலையில் யோகா மகோத்சவத்தை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி மக்களை வலியுறுத்தினார். 

மூன்று நாள்கள் நடைபெறும் யோகா மகோத்சவம் மார்ச் 13, 14 ஆகிய தேதிகளில் தல்கடோரா மைதானத்திலும், மார்ச் 15-ஆம் தேதி மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் யோகா புது தில்லியிலும் நடைபெறும். 

யோகா மஹோத்ஸவ் குறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ட்வீட்டைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், யோகா தினத்திற்கு நூறு நாள்கள் உள்ள நிலையில், அதை உற்சாகத்துடன் கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், யோகாவை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றவில்லை என்றால், அதை விரைவில் மாற்றுங்கள் என்றார். 

சர்வதேச யோகா தினம் 2014ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.