2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பிரதமர் மோடி அமைச்சர்களுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

News image
Updated On :14 மார்ச் 2023, 5:32 am

DIN

மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பிரஹலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர், கிரண் ரிஜிஜு, அனுராக் தாகூர், பியூஸ் கோயல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவைகள் முடங்கியது.

அதேபோல், பிரிட்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற காங்கிரஸின் ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றம் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் நேற்றைய அவைக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.