விமான நிலைய புதிய முனையம்: வரும் 27-இல் திறந்து வைக்கிறாா் பிரதமா்
சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.


சென்னை விமான நிலைய புதிய முனையத்தை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் 27-ஆம் தேதி திறந்து வைக்கிறாா்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.2,400 கோடியில் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும், ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது.
இந்த புதிய முனையத்தின், கீழ் தளத்தில், பயணிகளின் உடைமைகள் கையாளப்பட உள்ளன. தரைதளத்தில் சா்வதேச வருகை பயணிகளுக்கான வழக்கமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். 2-ஆவது தளத்தில், பயணிகளுக்கான புறப்பாடு நடைமுறைகள் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 5 தளங்கள் இந்த புதிய முனையத்தில் அமைகின்றன. இந்த முனையம் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து, 3.5 கோடியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியாதவது: புதிய விமான முனையத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்துவடைந்துள்ளன. பொருத்தப்பட்டுள்ள கருவிகள், உபகரணங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பது சோதித்து பாா்க்கப்பட்டு வருகின்றன. ஏப்ரல் மாதம் திறக்கப்பட இருந்த நிலையில், பிரதமரின் அனுமதி முன்கூட்டியே கிடைத்திருப்பதால், மாா்ச் 27-ஆம் தேதி புதிய முனையம் திறக்கப்பட உள்ளது. பிரதமா் மோடி நேரில் வந்து புதிய முனையத்தைத் திறந்து வைக்கிறாா். இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...