வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

லண்டன் பேச்சு: ராகுல் காந்தி இன்று விளக்கமளிக்க வாய்ப்பு!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகத்தை விமா்சித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து இன்று அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
ராகுல் காந்தி
Updated On :16 மார்ச் 2023, 3:46 am

DIN

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இந்திய ஜனநாயகத்தை விமா்சித்து ராகுல் காந்தி பேசியது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து இன்று அவர் விளக்கமளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அண்மையில் சொற்பொழிவாற்றிய ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருப்பதாகவும், அவா் உள்பட பல்வேறு அரசியல் தலைவா்கள் மத்திய அரசின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினாா்.

இந்திய ஜனநாயகம் குறித்தும், நாடாளுமன்றம் குறித்தும் வெளிநாட்டில் பேசியதற்காக ராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளும் பாஜக எம்.பி.க்கள் கடந்த 3 நாள்களாக நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

இந்நிலையில், பிரிட்டன் பயணத்தை முடித்துவிட்டு தில்லி திரும்பியுள்ள ராகுல் காந்தி இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து லண்டன் பேச்சு குறித்து ராகுல் காந்தி விளக்கமளிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.