2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

4வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்: அமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! 

நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 

News image
Updated On :16 மார்ச் 2023, 7:54 am

DIN

நாடாளுமன்றத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனைகளை நடத்தி வருகிறார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமர்வு, கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. ஆனால், ஆளும்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினா்களின் அமளி காரணமாக, தொடர்ந்து 3 நாள்களாக எவ்வித விவாதமும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடியவுடன் இரு அவைகளிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கோரி, எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவையின் மையப்பகுதியில் முற்றுகையிட்டு, முழக்கம் எழுப்பினா். இதையடுத்து இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், அனுராக் தாகூர், கிரண் ரிஜ்ஜூ, பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.