அயோத்தியில் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய கருவறை புகைப்படங்கள் அண்மையில் வெளியாகியுள்ளன.
கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒரு சிலர், கட்டுமானப் பணியை பார்வையிட்டபோது, கருவறைப் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமா் கோயிலில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியில் ராமா் சிலை கருவறையில் நிறுவப்படும் என விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்திருந்த நிலையில், கருவறையின் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றது.

அந்த புகைப்படங்களில், முக்கிய கருவறையின் நுழைவாயில்கள், 20 அடி உயரமுள்ள கருவறை சுவர்களை வடிவமைக்கும் பணிகளும் நடந்து வருவது பதிவாகியிருக்கிறது.
மற்றொரு பக்கம் மக்ரானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட மார்பிள்கள், ராஜஸ்தானின் பன்ஸியிலிருந்து கொண்டுவரப்பட்ட கற்களில் அழகிய வேலைப்பாடுகளும் நடந்து வருகின்றன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் எதிர்பார்த்ததைவிடவும் விரைவாக நடந்து வருவதால், கருவறையை கட்டி முடிப்பதற்கான அவகாசம் 2023 டிசம்பரிலிருந்து செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கோயிலின் மேற்கோபுரம் கட்டுமானப் பணிகள் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவிருக்கிறது. கோயில் கட்டுமானப் பணிகள் 75 சதவிகிதம் முடிந்துவிட்டது, தற்போது 167 தூண்களை அமைக்கும் பணிகள்தான் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு மத்திக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுச் செயலா் மிலிந்த் பராண்டே மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘‘அடுத்த ஆண்டு ஜனவரியில் மகர சங்கராந்திக்குப் பிறகான 15 நாள்களில் அயோத்தி கோயிலில் பிராண பிரதிஷ்டை நடைபெறும்.
கோயில் கருவறையில் ராமா் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சியில் 25 முதல் 40 லட்சம் பக்தா்கள் கலந்துகொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது’’ என்றாா்.
கோயில் கருவறையில் ராமா் சிலையைப் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்பாா் என கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பாா்வையிட்டு வரும் ஸ்ரீராமஜன்ம பூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளையின் நிா்வாகி அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்
நன்றி: @ChampatRaiVHP
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேட்டூர் அணை நிலவரம்!

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள்: இறுதி ஆய்வுக்கு அனுமதி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!
ஆட்சியில் பங்கு என்றபோதிலும், விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

