குறைந்தபட்சம் ஏதோ ஒரு பூஜை செய்கிறார்களே: விமரிசித்த பாஜக எம்.பி.

காங்கிரஸ் கட்சியினர் குறித்து விமரிசித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி, குறைந்தபட்சம் ஏதோ ஒரு பூஜை செய்கிறார்களே என்று குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் ஏதோ ஒரு பூஜை செய்கிறார்களே: விமரிசித்த பாஜக எம்.பி.


பெங்களூரு: தேர்தல் நாளில் சிலிண்டரை வைத்து வழிபட்ட காங்கிரஸ் கட்சியினர் குறித்து விமரிசித்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி, குறைந்தபட்சம் ஏதோ ஒரு பூஜை செய்கிறார்களே என்று குறிப்பிட்டுள்ளார்.

திடீரென்று, காங்கிரஸ் கட்சியினர் எல்லாவற்றையும் வழிபடத் தொடங்கிவிட்டனர்.  அப்படித்தான் பஜ்ரங் பலி கோயிலுக்கு கடந்த வாரம் சென்றனர். தற்போது சிலிண்டரிலும் கடவுளைப் பார்க்கிறார்கள் என்று தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார்.

எரிவாயு சிலிண்டரை வழிபட்ட டி.கே. ஷிவகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியினரை நாங்கள் ஆதரிக்கிறோம், குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியினர் ஏதோ ஒன்றை பூஜை செய்கிறார்களே, கர்நாடக மாநிலம் பஜ்ரங் பலியின் மண், நிச்சயம் அவர் மே 13ஆம் தேதி இவர்களுக்குப் பதில் சொல்வார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சியினர் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி பூஜை செய்து, கன்னட மக்களே, வாக்களிக்கச் செல்லும் முன் சிலிண்டருக்கு பூஜை செய்ய மறவாதீர் என்று சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com