தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வகுப்புவாத அரசியலை விட, வளர்ச்சிக்கான அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளது: கெலாட் 

கர்நாடகம் வகுப்புவாத அரசியலை விட வளர்ச்சி அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :13 மே 2023, 7:59 am

DIN

கர்நாடகம் வகுப்புவாத அரசியலை விட வளர்ச்சி அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வாக்குகள் இன்று எண்ணப்பட்டுவரும் நிலையில், கர்நாடகத்தில் பாஜக 75 இடங்களிலும், காங்கிரஸ் 132 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. 

ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல்களிலும் மீண்டும் இதேபோன்று  நிகழும் என்று கெலாட் இந்தியில் ட்வீட் செய்துள்ளார்.

நான்கு மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ பயணத்தின்போது கர்நாடகத்தில் காணப்பட்ட சூழல் தேர்தல் முடிவுகளில் தெளிவாகக் காணப்படுவதாக கெலாட் கூறினார். 

காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவரும் நிலையில், ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு ராஜஸ்தானில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.