கர்நாடகத்தில் 8 அமைச்சர்கள் பதவியேற்பு!

கர்நாடக முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து 8 அமைச்சர்கள் இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர்,
கே.ஹெச்.முனியப்பா
கே.ஹெச்.முனியப்பா

கர்நாடக முதல்வர், துணை முதல்வரைத் தொடர்ந்து 8 அமைச்சர்கள் இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக்கொண்டனர்,

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதையடுத்து பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் இன்று(மே 20, சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் 2 ஆவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜி. பரமேஸ்வரா, கே.ஹெச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்க்கிஹோலி, ராமலிங்கா ரெட்டி, பிரியங்க் கார்கே, சமீர் அகமது கான் ஆகிய 8 அமைச்சர்களும் பதவியேற்றனர். 

கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 

இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பிகார் முதல்வர் நிதீஷ் குமார், பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com