மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கர்நாடக முதல்வர், துணை முதல்வருக்கு பிரதமர் வாழ்த்து!

கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள  டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :20 மே 2023, 10:40 am

DIN

கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள  டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கர்நாடக பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில் கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று(சனிக்கிழமை) பதவியேற்றுக் கொண்டார். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வர் பதவிக்கு போட்டி நிலவி வந்த நிலையில் கட்சித் தலைமையின் நீண்ட ஆலோசனைக்குப் பின்னர், கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையடுத்து, பெங்களூரு​வில் கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20, சனிக்கிழமை) பிற்பகல் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் 2ஆவது முறையாக கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் அவருக்குப் பதவிப் பிரமாணம் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றுக் கொண்டார். மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்ட இருவருக்கும் தனது வாழ்த்துகளை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள சித்தராமையா மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டுள்ள டி.கே.சிவகுமார் இருவருக்கும் எனது வாழ்த்துகள். அவர்களது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.


கர்நாடகத்தில் 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளைக் கைப்பற்றி மாநிலத்தில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.