அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லாபம் 5 மடங்கு உயர்வு

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் லாபம் 5 மடங்கு உயர்வு

வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான, அசோக் லேலண்ட், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து, ரூ.802.71 கோடியாக உள்ளது.

புதுதில்லி: வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமான, அசோக் லேலண்ட், மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் அதன் நிகர லாபம் ஐந்து மடங்கு அதிகரித்து, ரூ.802.71 கோடியாக உள்ளது.

இதுகுறித்து அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.157.85 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு காலாண்டில் செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.9,926.97 கோடியிலிருந்து ரூ.13,202.55 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த காலாண்டில் மொத்த செலவினங்கள் ரூ.9,429.55 கோடியிலிருந்து ரூ.12,085.5 கோடியாக அதிகரித்துள்ளது. மார்ச் 31, 2023 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.1,361.66 கோடியாக உள்ளது.

2022ம் நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.285.45 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. 2022ம் நிதியாண்டில் ரூ.26,237.15 கோடியாக இருந்த செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய், 2023ம் நிதியாண்டில் ரூ.41,672.6 கோடியாக அதிகரித்துள்ளது.

சாதகமான பொருளாதார காரணிகள் மற்றும் இறுதி பயனர் தொழில்களின் ஆரோக்கியமான தேவை காரணமாக வணிக வாகனத் தொழில் உற்சாகமாக உள்ளது என்றார் அசோக் லேலண்ட் நிர்வாகத் தலைவர் தீரஜ் இந்துஜா.

கட்டுமானம் மற்றும் சுரங்கம், விவசாயம், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான அதிகரித்த மூலதன ஒதுக்கீடு மற்றும் மாற்று தேவை போன்ற முக்கிய துறைகளின் வளர்ச்சி போக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச செயல்பாடுகள், பாதுகாப்பு, மின் தீர்வுகள் மற்றும் உதிரி பாகங்கள் வணிகங்களில் கவனம் செலுத்துவது ஆகிய முக்கிய வணிகத்தின் நிலையற்ற தன்மையை தொடர்ந்து சமநிலைப்படுத்தும் என்றார் இந்துஜா.

2022-23ம் ஆண்டிற்கான பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அதன் இயக்குநர்கள் குழு தலா 1 ரூபாய் ஈக்விட்டி பங்கிற்கு ரூ. 2.60 ஈவுத்தொகையாகப் பரிந்துரைத்துள்ளதாக நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com