பா.ஜ.க.வினருக்கு மதவாதத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாது: சத்தீஸ்கர் முதல்வர் சாடல்!

பாஜகவினரின் சிந்தனை முழுவதும் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளது என சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் பேசினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் கலந்துகொண்டு பேசினார். 

அவர் பேசியதாவது: “பா.ஜ.க.வுக்கு மதவாதத்தை தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது. குறுகிய தேர்தல் வெற்றிக்காக இரு சமூகத்தினரிடையே சண்டையைத் தூண்டிவிட்டு நீண்டகால பகையை மூட்டிவிடுவதை தவிர அவர்கள் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. 

பாஜகவினரின் சிந்தனை முழுவதும் வன்முறையும், வெறுப்பும் மட்டுமே உள்ளன. மக்களை பொருளாதாரம் பற்றி சிந்திக்க விடாமல் அனைத்து நேரமும் மதத்தைப் பற்றியே விவாதங்களைக் கிளப்புவார்கள். 

மக்கள் அவர்களின் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது. பசுமையாக காட்சியளித்த சத்தீஸ்கர் மாநிலம் பாஜக முதல்வர் ரமண்சிங் ஆட்சியில் சிவப்பாக மாறியது.” என்று பூபேஷ் பாகல் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com