சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலால் பரபரப்பு!

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நக்சலைட்டுகள் தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

சத்தீஸ்கரில் 90 சட்டப்பேரவை தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதனிடையே சுக்மா பகுதியில் இன்று நக்சல்கள் தாக்குதல் நடைபெற்றது. ஒர்ச்சா காவல் நிலையம் அருகே உள்ள வனப்பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. 

இதையடுத்து நக்சல்கள் தப்பித்து ஓடியதால் அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

சுமார் 10 நிமிடங்கள் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகவும் அதன்பின்னர் நக்சல்கள் தப்பித்து ஓடியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதேநேரத்தில் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினர். 

நக்சல்கள் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து இன்று பிற்பகல் சுக்மா மாவட்டத்தில் மின்பா பகுதியில் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com