எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தில்லியில் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து: ஒருவர் பலி

தில்லியில் ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

News image
Updated On :10 நவம்பர் 2023, 9:20 am

DIN

தில்லியில் ரோஹினிப் பகுதியில், பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பேருந்துக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். ஒருவர் படுகாயமடைந்தார், மேலும் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

இந்த விபத்து கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று நடைபெற்றது. விபத்துக்குள்ளான தில்லி போக்குவரத்துக் கழகத்தின் மின்சாரப் பேருந்தின் ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற ஒருவர் பலியானார். பன்னிரண்டுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஒரு கார் மற்றும் ஒரு மின்சார ரிக் ஷா ஆகியவை சேதமடைந்தன. ஒருவர் காயமடைந்தார்.

இதைத் தொடர்ந்து பேருந்துக்குள் இருந்த சிசிடிவி கேமராவைப் பரிசோதித்த காவல்துறையினர் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பேருந்தை நடத்துநர் நிறுத்த முயற்சி செய்வதும் பதிவாகியிருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.