தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்.10 ம் தேதி முடிவடைந்தது. நவம்.13-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 15-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதியில் 145 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். 

மேட்ச்சல் தொகுதியில் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாராயணப்பேட்டை தொகுதியில் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அக்டோபர் 9-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து  நவம்.11-ஆம் தேதி வரை ரூ.544 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com