கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தேர்தல் அறிக்கை கீதை, குரான் போன்றது: மல்லிகார்ஜூன கார்கே

தெலங்கானா தேர்தலையொட்டி காங்கிரஸின் தேர்தலறிக்கையை வெளியிட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

News image
மல்லிகார்ஜுன கார்கே
Updated On :17 நவம்பர் 2023, 12:21 pm

DIN

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (நவ.17) வெளியிட்டார். 

42 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு இலவச இணைய வசதி, மாதம் 4000 ரூபாய் சமூக ஓய்வுதியம் வழங்கும் திட்டம் உள்பட அதில் ஆறு வாக்குறுதிகள் மற்றும் ஏராளமான பிரகடனங்கள் இடம்பெற்றுள்ளன.  

ஆறு வாக்குறுதிகளில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர், 200 யூனிட் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நில அளவை திட்டமான தரணி திட்டம் நீக்கப்பட்டுப் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 12,000 ரூபாய் வழங்கும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.

10 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு, மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கான 5 லட்சம் ரூபாய்க்கு நிதியுதவி அட்டை, இலவச இணைய வசதி ஆகியவை அந்த ஆறு வாக்குறுதிகளில் அடங்கும்.

இதனை வெளியிட்டுப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே,  “எங்களுக்கு தேர்தலறிக்கை என்பது பகவத் கீதை, பைபிள், குரான் போன்றது. ஆட்சிக்கு வந்த முதல் பேரவை கூட்டத்திலேயே ஆறு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் நவ.30  அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் கணக்கெடுப்பட்டு தேர்தல் முடிவுகள் டிச.3 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.