உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற காவலர்!

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற தலைமைக் காவலர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து பகுதிக்கு முதன்முதலில் சென்ற காவலர்!

உத்தரகண்ட் சுரங்கப்பாதை இடிந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து முதன்முதலில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர், அதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரசு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் சுரேஷ் குமார் கூறியதாவது, “சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்று வரும் சில்க்யாரா பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஒன்றரை வருடமாக பணியாற்றி வருகிறேன். 

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அங்கு போனபோது கூட கட்டுமானப் பணிகள் அனைத்தும் எந்தவித பிரச்னையும் இன்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் திடீரென நவம்பர் 12-ஆம் தேதி காலை 8 மணியளவில் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து உடனே மற்றொரு காவலருடன் சில்க்யாரா சுரங்கப்பாதை பகுதிக்குச் சென்றேன். 

அங்கு சென்றபோது சுமார் 200 மீட்டர் தூரத்திற்குகிடந்த  இடிபாடுகளால் வெளிவரும் பாதை முழுவதுமாக மூடப்பட்டிருந்தது. காலை 5.30 மணிக்கே விபத்து ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாமதமாகத்தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக எனது மூத்த அதிகாரிகளுக்கு நான் தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளைத் தொடங்கினர்.” என்று கூறினார். 

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 41 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கி 11 நாட்களாக தவித்து வருகின்றனர். அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளே சிக்கியிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. 

சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களையும் இன்றைக்குள் (புதன்கிழமை) மீட்க மீட்புக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com