அக்னிபத் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் கனவுகளை பாஜக சிதைத்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்.25-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆட்சியைத் தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியைக் கைப்பற்ற பாஜகவும் கடுமையாக மோதி வருகின்றன.
தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இரு கட்சிகளின் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் ராஜஸ்தானின் தோல்பூரில் இன்று (நவ.22) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, “நாட்டின் வளங்கள் எவ்வாறு பகிரப்பட்டுள்ளன என்று தெரிந்துகொள்வது அவசியமாகும். அந்த வகையில் தலித் மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகாரம் எவ்வளவு அளிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியமாகும்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அதைத் தொடர்ந்து மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் தேசிய அளவிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
இதையும் படிக்க: பிரதமர் மோடி மிகவும் பதற்றமாக இருக்கிறார்: அசோக் கெலாட்
முன்பு தன்னை ஓபிசி என அடையாளப்படுத்தி வந்தார் பிரதமர் மோடி. நான் ஜாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்த தொடங்கியபின்பு தற்போது நாட்டில் ஏழை என்ற ஒரே ஜாதி மட்டுமே இருப்பதாக மாற்றிப் பேசி வருகிறார்.
கோடிக்கணக்கில் நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த பாஜக இருக்கும் வேலைவாய்ப்புகளையும் குறைத்து வருகிறது.
நாட்டைக் காப்பதற்காக கனவுடன் இருந்த இளைஞர்களின் கனவுகளை அக்னிபத் திட்டத்தின் மூலம் பாஜக சிதைத்துள்ளது.” என்று ராகுல் காந்தி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்த சூர்யா, சிரஞ்சீவி!

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு


