கோப்புப்படம்
கோப்புப்படம்

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கியது!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் காணொலி வாயிலாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. 

காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது. 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 27 ஆவது கூட்டம் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற்றது. இதில், நவம்பர் 1 முதல் 23 ஆம் தேதி வரை வினாடிக்கு 2,600 கன அடி நீர் தமிழகத்துக்கு திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com