பஞ்சாப் எல்லையில் ஹெராயின், மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் பறிமுதல்!

இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் டிரோன், 5 கிலோ ஹெராயின் மற்றும் ஒரு துப்பாக்கியை பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுளனர். 
பஞ்சாப் எல்லையில் ஹெராயின், மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் பறிமுதல்!

பஞ்சாப் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த மற்றுமொரு பாகிஸ்தான் ட்ரோன் எல்லைப் பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.  பாகிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகப் பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பஞ்சாப் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தங்கள் எக்ஸ் வலைதளப் பக்கத்தில், நவ.26 அதிகாலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமிர்தசரசில் உள்ள சக் அல்லா பக்ஷ் கிராமத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரு பாகிஸ்தான் ட்ரோன், ஐந்து கிலோ ஹெராயின் மற்றும் ஒரு பிஸ்டன் துப்பாக்கியுடன், மொத்தம் 20 குண்டுகளைக் கொண்ட 2 மேகசின்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  

இதையும் படிக்க : யானை தாக்கி விவசாயி பலி!

மேலும் கடந்த 10 மாதத்தில் மட்டும் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்த 69 பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவற்றுள் பெரும்பான்மை ட்ரோன்கள் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com