பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

அஸ்ஸாம்: 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோப்புப்படம்

Published On :

அஸ்ஸாம் மாநிலம் காம்ருப் மாவட்டத்தில் 15 கோடி மதிப்பிலான ஹெராயின் வைத்திருந்த இருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அஸ்ஸாம் காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய இந்தச் சோதனையில் 1.8 கிலோ மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும், குற்றவாளிகள் வண்டியை நிறுத்தாமல்  தப்பிக்க முயற்சி செய்தபோது,  காவல்துறையினர் வண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திக் குற்றவாளிகளை மடக்கிப்பிடித்தனர் எனக் காவல்துறைத் துணைத்தலைவர்  பார்த்த சாரதி மகந்தா தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மணிப்பூரிலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட இருவரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.