நாகாலாந்தின் வண்ணமயமான விழாவில் இணையும் அஸ்ஸாம்!

ஹார்ன்பில் திருவிழாவில் அஸ்ஸாம் மாநிலமும் அதிகாரபூர்வமாக இணையவுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

நாகாலாந்தின் பெருமைமிகு திருவிழாக்களில் ஒன்றான ஹார்ன்பில் திருவிழாவில் அதிகாரபூர்வமாக அஸ்ஸாம் மாநிலமும் இணையவுள்ளது. 10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் இரண்டு வடகிழக்கு மாநிலங்களின் முதலர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஜெர்மனி, அமெரிக்கா, மற்றும் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளும் இந்த நிகழ்வை ஒருங்கிணைப்பதில் இணைகின்றன.

நாகாலாந்தின் முதல்வர் நைபியு ரியோ தனது எக்ஸ் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களின் கலாச்சாரத்தைத் தெரியப்படுத்தும் தளமாக இந்த நிகழ்வு தோன்றியதாக அஸ்ஸாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

டிச.1 முதல் 10-ம் தேதி வரை நாகாலாந்தின் பாரம்பரிய நகரமான கிசாமா கிராமத்தில் இந்த நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

24-வது ஆண்டாக நடைபெறும் நிகழ்வில் நாகாலாந்தின் பழங்குடி இனங்கள் கலந்து கொண்டு தங்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிவிக்கும்வகையிலான நிகழ்வுகள் நடைபெறும். 

இருவாய்ச்சி (ஹார்ன்பில்) பறவை மீதான இம்மக்களின் மதிப்பின் காரணமாக இந்த விழா, அந்தப் பறவையின் பெயராலேயே கொண்டாடப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com