புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

டிசம்பரில் 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் ராகுல்!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் மாதத்தில் 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

News image
Updated On :28 நவம்பர் 2023, 11:49 am

DIN

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டிசம்பர் மாதத்தில் 3 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். 

டிசம்பர் 8 முதல் 15 வரை இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கு ராகுல் காந்தி பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தின் முக்கியத்துவமாக  ராகுல் இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாற்ற உள்ளதாகவும், அவரது பயணத்தின்போது பல்கலைக்கழகங்களுக்குச் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் இந்தாண்டின் தொடக்கத்தில் நார்வே, நெதர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து இந்திய புலம்பெயர்ந்தோருடன் உரையாடல் நிகழ்த்தினார் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.