
மும்பையில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தக் காதலியின் கழுத்தை வெட்டிய நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாக்கப்பட்ட பெண் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது இரண்டு சகோரர்களுடன் பரசுராம் நகரில் வசித்து வந்துள்ளார். 44 வயதான குற்றவாளியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒருவருடமாகக் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள அந்தப் பெண் மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
திங்கள் கிழமை இரவு இது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் பலர் முன்னிலையில் அவரை அவமானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்தவர் செவ்வாய்கிழமை மதியம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரது கழுத்தை பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதியினர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் அன்று இரவு குற்றவாளியைக் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.