தலையில் கியாஸ் சிலிண்டருடன் நடனமாடி அசத்தும் பெண்: ஏன் இந்த விபரீதம்?

கேஸ் சிலிண்டரை தலையில் சுமந்தபடி நடனமாடும் விடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 
தலையில் கியாஸ் சிலிண்டருடன் நடனமாடி அசத்தும் பெண்: ஏன் இந்த விபரீதம்?
Updated on
1 min read

இளம் பெண்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ், ஷாட்ஸ் வெளியிடுவது அதிகரித்துவரும் நிலையில், இந்த பெண் சற்று வித்தியாசமாக கேஸ் சிலிண்டரை தலையில் சுமந்தபடி நடனமாடும் விடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

அந்த விடியோவில், தலையில் கேஸ் சிலிண்டரை வைத்துக்கொண்டு சர்வ சாதாரணமாக எந்தவித சிரமமும் இன்றி நடனமாடுகிறார். அதோடு நிறுத்தாமல், சிலிண்டர் தலையில் இருக்கும்போதே இரும்பு பாத்திரம் ஒன்றின் மீது காலை வைத்து ஏறி நின்று ஸ்டண்ட் செய்து சாகசம் செய்துள்ளார். 

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கிட்டத்தட்ட 28 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த விடியோவை பார்த்து, கருத்தும் தெரிவித்துள்ளனர். 

பலரும் இந்த விடியோக்கு எதிரான கருத்துக்களும் பதிவிட்டுள்ளனர். அதில் ஏன் இதுபோன்று பாதுகாப்பற்ற சாகசங்களை வீட்டில் செய்கிறீர்கள்? உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து உயிரைப் பணயம் வைக்க வேண்டும்? பாதுகாப்பாக இருப்பது நல்லது.. யாரும் இதுபோன்ற செயல்களைச் செய்யக்கூடாது என்று பயனர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இந்த நடனத்துக்கு தயவுசெய்து யாரும் ஊக்குவிக்கக்கூடாது என்று மற்றொரு பயனர் கருத்து வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com