ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உலக கோப்பை போட்டியில் தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்குவதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. அந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து 5.5 ரிக்டா் அளவு கொண்ட பின்னதிா்வு ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியது.
இந்த நிலநடுக்கத்தில் 320 போ் உயிரிழந்ததாக ஐ.நா. முதலில் தெரிவித்த நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 2000 பேரை தாண்டியுள்ளதாகவும், சுமார் 6 கிராமங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படவர்களுக்கு உதவும் வகையில், உலக கோப்பை போட்டிகளுக்கு தனக்கு கிடைக்கும் சம்பளம் முழுவதையும் நன்கொடையாக வழங்க உள்ளதாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கான் அறிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அறிந்து வருந்துகிறேன். நிதி திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட இருப்பதாக ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இன்று 18, நாளை 5 மாவட்டங்களில் கனமழை!
டி20 உலகக் கோப்பை: நட்சத்திர வீராங்கனை ஸ்ரேயங்கா விலகல்... இந்திய அணிக்குப் பின்னடைவு!

ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையத்தில் ஊதியத்துடன் கூடிய பயிற்சி!

சங்க இலக்கியத்தில் கானல் நீர் - கனைகதிர் ஆவி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


