ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஏர் இந்தியா விமான சேவை அக்.14 வரை ரத்து!

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போா் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

News image
காசா பகுதியில் வான்வழித் தாக்குதலில் தகர்க்கப்பட்ட மசூதி.
Updated On :8 அக்டோபர் 2023, 9:27 am

DIN

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான போா் காரணமாக விமான சேவையை வரும் அக்.14 ஆம் தேதி வரை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

இது குறித்து ஏர் இந்தியா விமானச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:

"எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காக டெல் அவிவ் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எங்கள் விமானங்கள் அக்டோபர் 14, 2023 வரை நிறுத்தி வைக்கப்படும்.  

முன்பதிவுவை உறுதிசெய்த பயணிகளுக்கு விமான நிறுவனம் அனைத்து ஆதரவையும் வழங்கும்." எனத் தெரிவித்தார்.

இஸ்ரேலில் போர் தீவிரமடைந்துள்ளதால் ஜெரூசலேம் புனித பயணத்தை தவிர்க்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் இஸ்ரேல் மீது சனிக்கிழமை காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீா் தாக்குதல் நடத்தினா்.

இந்த தாக்குதலில் 313-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1990-க்கும் மேற்பட்டோா் காயம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.