பஞ்சாப்: காரர் காவல் நிலையத்தில் பயங்கர தீ விபத்து
பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.


பஞ்சாபில் காரர் காவல் நிலையத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம், மொஹாலி மாவட்டத்தில் உள்ள காரர் காவல் நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்துக்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை.
அதேசமயம் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. தீவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் குரலி கிராமத்தில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...