இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள்: பிரதமர் மோடி
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹார்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 30.3 ஓவர்களில் இலக்கை எட்டி பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அகமதாபாத்தில் இன்று இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...