கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 10:03 am

ANI

புது தில்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி42  சதவிகிதமாக இருந்தது. இது தற்போது 4 சதவீதம் உயர்த்தப்பட்டதால் 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டதன் மூலம் 47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் என சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுளள்து.

7வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி இந்த அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மிக நீண்ட நாள்களாக மத்திய அரசு ஊழியர்கள் காத்திருந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பரிசாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

ஒருவருக்கு, அடிப்படை ஊதியமான ரூ.18 ஆயிரம் மாத வருமானம் என்றால், தற்போது 42 சதவிகித அகவிலைப்படி வழங்கப்பட்டால் ரூ.7,560 கிடைக்கும். இது தற்போது 46 சதவிகிதமாக உயர்த்தப்பட்டதால் வருவாயுடன் அகவிலைப்படி ரூ.8,280 கூடுதலாகக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த அகவிலைப்படி உயா்வு 2023 ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கப்படுமென்று தெரிகிறது. இதன் முன்பு கடந்த மாா்ச் 24-ஆம் தேதி அகவிலைப்படி உயா்த்தப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்பட்டது. வழக்கமாக ஆண்டுக்கு இருமுறை விலைவாசி உயா்வின் அடிப்படையில் அகவிலைப்படி அதிகரிக்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.