மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தெலங்கானா தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தெலங்கானா பேரவைத் தேர்தலுக்காக 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.  

News image

கோப்புப் படம்

Updated On :22 அக்டோபர் 2023, 11:03 am

DIN

தெலங்கானா பேரவைத் தேர்தலுக்காக 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. அவரது கட்சிக்கும், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

தேர்தலையொட்டி அனல் பறக்கும் பிரசாத்தில் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 52 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் மூன்று எம்.பிக்களும், எம்எல்ஏக்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

எம்எல்ஏ ராஜா சிங் கோஷமஹால் தொகுதியிலேயே மீண்டும் போட்டியிடுகிறார். இவர், முகமது நபிகள் குறித்து அவதூறு கருத்து தெரித்தமைக்காக கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இன்று மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.