ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

63 வயதான இவர் ஏற்கெனவே மன அழுத்ததுக்கான சிகிச்சையில் இருந்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

போபால்: மாவட்ட மற்றும் அமர்வுகள் நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்ற பிரேம் சின்ஹா, மன அழுத்ததால் தனது வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

63 வயதான இவர் ஏற்கெனவே மன அழுத்ததுக்கான சிகிச்சையில் இருந்துள்ளார்.

பிரேம் சின்ஹாவின் தற்கொலைக் குறிப்பில், இந்த முடிவை எடுக்கக் காரணம் எதிர்மறை எண்ணங்களால் தான் தொல்லைக்குள்ளாவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உமரியா நீதிமன்றத்தில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பின் மாநில தீர்ப்பாயத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 

கடந்த ஒன்றிரண்டு மாதங்களாக கடும் மன அழுத்ததில் இருந்ததாகவும் அதனால் தனியாக அமைதியான இடத்தில் வசிக்க தொடங்கியதாகவும் அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

திங்கள்கிழமை (அக்.23) இரவு அவர் அறையில் தூங்க சென்றிருக்கிறார். மறுநாள் அதிகாலையில் மனைவி பார்க்கும் போது அவர் படுக்கையில் இல்லை. அவர்களது வீட்டில் இருந்த தகர கூரையில் தூக்கிட்டுள்ளார்.

குடும்பத்தினர் விரைந்து மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com