தொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

கேரள குண்டுவெடிப்பு: காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம்!

 கேரளாவின் கிறிஸ்தவ கூட்டரங்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Published On :

கேரளாவின் கிறிஸ்தவ கூட்டரங்கில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “கேரளாவில் மத நிகழ்ச்சியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். 

கொன்று அழிக்கும் மனநிலைக்கு என் மாநிலம் இரையாவதைப் பார்ப்பது சோகமானது. இத்தகைய காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிப்பதில் அனைத்து மதத் தலைவர்களும் ஒன்றுபடவேண்டும், வன்முறையால் வன்முறையைத் தவிர வேறு எதையும் சாதிக்க முடியாது என்று அவர்களைப் பின்பற்றுபவர்களுக்கு போதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று சசி தரூர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.