FOLLOW US

ON GOOGLE DISCOVER

அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!புதுச்சேரியில் காற்றில் பறக்க விடப்பட்ட பேனர் தடை சட்டம்! என்ன சொல்கிறார்கள் மக்கள்?வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!போலி பத்திரப்பதிவுகள் குறித்து மக்கள் புகாரளிக்கலாம்: அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் எப்போது? அமைச்சர் மரிய வில்சன் தகவல்
/

கட்டா குஸ்தி இயக்குநருடன் இணையும் கென்!

கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் அடுத்த படத்தில் கென் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image

கென் / செல்லா அய்யாவு

Updated On :18 ஜூலை 2026, 4:44 pm IST

கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் அடுத்த படத்தில் கென் நடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் கருணாஸின் மகனான கென் யூத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரே கதாநாயகனாகவும் நடித்த இத்திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

யூத் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் அரசன் மற்றும் ராஜன் வகையறா படங்களில், அமீரின் ராஜன் கதாபாத்திரத்தின் இளவயது பாத்திரத்தில் கென் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் அவர் எடுத்த புகைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, அடுத்ததாக கட்டா குஸ்தி இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கும் படத்தில் கென் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டா குஸ்தி - 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்ற நிலையில், தனது அடுத்தப் படத்தில் கென்னை நடிக்க வைக்க இயக்குநர் செல்லா அய்யாவு முடிவு செய்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

வெற்றிமாறன் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என்றும், முழுக்க காமெடி ஜானரில் படம் உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Summary

Reports indicate that Ken will be acting in the next film directed by Gatta Kusthi director Chella Ayyavu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.