

ஆந்திரப் பிரதேச ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
விஜயநகரம் மாவட்டத்தின் கன்கடபள்ளி பகுதியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை விசாகப்பட்டினம்-ராயகடா இடையிலான பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினம்-பலாசா பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியதில் சில பெட்டிகள் தடம்புரண்டன.
இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த நிலையில் ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி, பலியானோர் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.