

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்த நரேந்திர மோடியை பூங்கொத்து கொடுத்து குடியரசுத் தலைவர் வரவேற்றார்.
இது தொடர்பான புகைப்படங்களை குடியரசுத் தலைவர் அலுவலகம் பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் சந்திரயான் -3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கியதன் மகிழ்ச்சியை தெரிவித்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்ததாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.