ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

10 ஏ320 நியோ ரக விமானங்களை வாங்கும் இண்டிகோ நிறுவனம்!

இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக 10 ஏ320 நியோ ஃபேமிலி விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 செப்டம்பர் 2023, 1:22 pm

DIN

இண்டிகோ நிறுவனம் சார்பில் கூடுதலாக 10-ஏ320 நியோ ஃபேமிலி விமானங்களை வாங்க ஏர்பஸ் நிறுவனத்திடம் ஆர்டர் செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, மேலும் 10 ஏ320 நியோ ஃபேமிலி ரக விமானங்களை ஆர்டர் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விமானங்கள் ஏற்கனவே விமான நிறுவனத்தால் ஆர்டர் செய்யப்பட்ட சுமார் 1,000 விமானங்களுடன் கூடுதலாக இது இருக்கும் என தெரிவித்துள்ளது.

ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 500 குறுகிய விமானங்களை வாங்குவதற்கான உறுதியான ஆர்டரை வழங்கியுள்ள இண்டிகோ நிறுவனம், இது குறித்த அறிவித்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில். இண்டிகோ போல் இதுவரை எந்த விமான நிறுவனமும் இத்தனை பெரிய ஆர்டரை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர் குளோப் ஏவியேஷன் இன்று நடந்த அதன் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், ஏர்பஸ் நிறுவனத்துடன் கூடுதலாக 10 ஏ 320 நியோ விமானங்களுக்கான ஆர்டரை வழங்க ஒப்புதல் அளித்ததாகவும், இதனை கொள்முதல் ஒப்பந்தத்தில் திருத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

ஜூன் 19 அன்று, 500 ஏர்பஸ் ஏ 320 விமானங்களுக்கு உறுதியான ஆர்டரை வழங்கியதன் மூலம் அதன் நீண்டகால எதிர்காலத்தை, இண்டிகோ வரையறுப்பதாக தெரிவித்துள்ளது.

தற்போது இண்டிகோ நிறுவனம் 300-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.