ஜி-20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி!

தில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தில்லி செல்கிறார்.
ஜி-20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி!

தில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தில்லி செல்கிறார்.

இதுகுறித்து மாநில அமைச்சரவை வட்டாரங்கள் கூறுகையில், 

தலைநகர் தில்லியில் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இந்தியக் கூட்டணியின் மற்ற சில தலைவர்களுடன் ஆலோசித்த பிறகு இரவு உணவில் கலந்துகொள்ளும் முடிவை மம்தா பானர்ஜி எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, செப்டம்பர் 9ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்களும் பங்கேற்க உள்ளனர். 

இந்நிலையில், முர்முவின் அழைப்பை ஏற்று விருந்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் சனிக்கிழமை புது தில்லிக்கு செல்ல உள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மம்தா சந்திக்கவுள்ளதாகவும், அவருடன் நல்லுறவை பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜி20 மாநாட்டின் அழைப்புக் கடிதத்தில் "இந்தியா" என்பதற்குப் பதிலாக "பாரத்" என்று பயன்படுத்தியதற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவுக்கு எதிராக பானர்ஜி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். இது நாட்டின் வரலாற்றைச் சிதைக்கும் அப்பட்டமான முயற்சி என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் செப்.9-ம் தேதி நடைபெறும் இரவு விருந்தில் மம்தா பானர்ஜி கலந்துகொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com