2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

நிஃபா வைரஸ்: பொதுமக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்!

நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Published On :

நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரளத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவமனை பணியாளர்கள் பிபிஇ கிட் அணிந்து பணிபுரியவும் கேரள சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது. 

நிஃபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 16 குழுக்களை அமைத்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் ​​நிஃபா வைரஸ் என சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் கேரளத்தில் 2 பேர் நிஃபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்ததாக அறிவித்துள்ளார். மேலும், மாநில அரசுக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அதற்காக மத்திய சுகாதாரத் துறை உதவும் எனவும் குறிப்பிட்டார். 

இந்நிலையில், நிஃபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய கேரள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.