காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டுக்கும் காவிரிக்கும் இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கர்நாடகம் தர மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் பிரச்னைகளுக்காக அமைக்கப்பட்ட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86-ஆவது கூட்டம் குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் மெய்நிகா் வழியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், காவிரியில் அடுத்த 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் தமிழ்நாட்டுக்குத் திறந்து விட காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட தண்ணீர் இல்லை என்று கூறி வருகிறது.
இந்நிலையில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிட முடியாது: சித்தராமையா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

