

உத்தர பிரதேச மாநிலத்தில் தேவ்தே கிராமத்தைச் சேர்ந்த ஷ்ரவன் ராம் எனும் நபர் குடும்ப பிரச்னைக் காரணமாக மனைவி மகன்களைக் கொன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
30 வயதான மனைவி, 7 வயதான மகன் மற்றும் 4 மாதங்களான குழந்தையின் உடல் வீட்டிற்கு முன் இருந்த தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. கொலை செய்த ராம் அருகிலிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்!
ராமின் சட்டைப் பையிலிருந்து கிடைத்த தற்கொலைக் கடிதத்தில் குடும்பத்தைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்துகொண்டதைக் குறிப்பிட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராம் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான பிரச்சனை சம்பந்தமான வழக்கு நடந்துகொண்டிருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.